தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் -

  திருகோணமலை

தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம்

தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம்

வரலாறு

EXAM TIME TABLE

IMG-20241030-WA0038.jpeg
IMG-20241030-WA0038.jpeg

பாடசாலை வரலாறு

ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் கடலலையின் சுறுசுறுப்பான ஓசையானது, திருக்கோணமலையையே சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது. கடலும் கடல்சூழ்ந்த இப் பிரதேசத்தின் நகரப்புறத்திலே பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் அழகும் அமைதியும் நிறைந்த தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் இன்று பெருமை பூத்து நிற்கின்றது. 1922ஆம் ஆண்டு திரு ஆறுமுகம் என்பவரால் திண்ணைப் பள்ளிக்கூடமாக ஓலைக்குடிசையொன்றில் ஆரம்பிக்கப்பட்டமையால் ஆறுமுகத்தான் பள்ளி எனவும் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

 

1927இல் திரு சூ. செபஸ்தியான்பிள்ளை அவர்கள் இப் பாடசாலையை நடாத்திவந்த போது கிறிஸ்தவ மிஷன் இப்பாடசாலையைப் பொறுப்பேற்று புனித பிரான்சிஸ் சவேரியார் என்ற புனிதரின் பெயரில் இப்பாடசாலை வளர்ச்சி பெறத்தொடங்கியது. இவ்வளர்ச்சியானது 1995 ஆம் ஆண்டில் 1C பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்ட எமது பாடசாலை அதன் முழுமையான சம்பவத்திரட்டுக்களை பாதுகாக்க முடியாத வகையில் 1983 இல் ஆவணங்கள் இருந்த பகுதி எரிக்கப்பட்டமை துரதிஸ்டமான விடயமாகும்.

 

கடந்த காலங்களில் இப் பாடசாலையின் வளச்சிக்கும் விருத்திக்கும் வித்திட்ட முன்னாள் அதிபர்களையும் அவர்களது அர்ப்பணிப்பான பணிகளையும் பெரும் மதிப்போடு இவ்விடத்தில் நினைந்து வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன். வைத்தியர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், குருக்கள், கணக்காளர்கள், தாதிகள், போன்று பலதரப்பட்ட கற்றோர் சமுதாயத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள். அவர்களது பணிக் காலங்கள் ஆவணமாக இல்லாத போதும் எமது அயராத முயற்சியின் பலனாக பல முதியவர்களை கல்விமான்களை அணுகி எம் பாடசாலையின் வரலாற்றைத் தொகுத்துள்ளோம்.