
பாடசாலை கீதம்
கலைமகள் திரு நடமிகும் கூடம் - நிலையான
கலைமகள் திரு நடமிரும் கூடம்
எழிலுடனே புகழ் பரப்பும் எமது நன்மாடம்
அறிவால் உயர்ந்தோர் உருவாகும்
அலைகள் மோதும் கோண மாமலையின் அறிவுதேடும்
புனித சவேரியாரின் புகழ் கூறும் கல்விக் கூடம்
(கலைமகள்)
மூன்று கலையும் வாழும் விளையாட்டும் சிறந்து ஓங்கும்
நாளைத் தலைவராக உருவாக வழிகள் கூறும்
(கலைமகள்)
அழகு மஞ்சள் கபிலம் என ஆடும் கொடியின் கீழே
இளமை பொங்க நின்றே நம் திறமை காண வந்தோம்
(கலைமகள்)





