
1. பாடசாலை விதிமுறைக்கு அமைவாக சீருடை அணிதல்வேண்டும்.
2. பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு வருகை தருதல் வேண்டும்.
3. அவசரம் ஏற்பட்டாலே தவிர விடுமுறை எடுத்தல் கூடாது ஒழுக்க சீலர்களாக நடந்து கொள்வது மிக மிக அவசியம். ஆண் மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமான சிகை அலங்காரத்துடன் வருதல் கட்டாயமானதாகும்.
4. பெண் மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமான வகையில் இரட்டைப்பின்னல் மற்றும் கறுப்பு ரிபன் கட்டுதல் வேண்டும் ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளைத் தொட்டு உரையாடுவதை தவிர்த்தல் வேண்டும்.
5. மாணவு தலைவர்களின் அறிவுறுத்தல்களை அனைத்து மாணவர்களும் ஏற்றுச் செயற்பட வேண்டும்.
6. சுகாதாரம் மற்றும் சுற்றாடல் தூய்மை செயற்பாடுகளுக்கு மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரவு குறைந்த மாணவர்கள் பொதுப்பரீட்சைக்கு தோற்றஅனுமதிக்கப்பட மாட்டர்ர்கள்.
7. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது தலைமைத்துவ ஆற்றலை வளர்க்கக் கூடிய குழுக்களில் பங்கு பற்ற வேண்டும்.
8. மாணவர் ஒழுக்க விதிகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் மாணவர் சுயவிபரப் படிவத்தில் பதியப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
9. பொருத்தமற்ற சீருடை மற்றும் பொருத்தமற்ற சிகையலங்காரம் என்பவற்றுடன் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
10. ஆண் மாணவர்கள் பாடசாலைக்கு தோடு அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
11. பாடசாலை விழாக்களின் போது ஆசிரியருக்கு கீழ்படிவுடன் செயற்படுதல் வேண்டும்.
12. பிரத்தியேக வகுப்புக்கள் காரணமாக பாடசாலை விடயங்களை தவிர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.





